நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக எல் சால்வடார் நாட்டில் கடந்த வியாழக்கிழமை முதல் ஊரடங்கை அமல்படுத்தி அந்நாட்டின் அதிபர் நயீப் புக்கேலே உத்தரவிட்டார்.
ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் வாரத்தில் இருமுறை மட்டுமே மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் வாங்க , உரிய அடையாள எண்களை கொண்டே வெளிய அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அந்நாட்டின், ஆன்டிகுவோ கஸ்கட்லான் நகராட்சியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு வெளியே , மரியாச்சி என்ற இசைக்குழு அன்னையர் தினத்தன்று தனிமையில் வைக்கப்பட்டுள்ள பெண்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தியது.
ஞாயிற்றுகிழமைவரை அந்நாட்டில், 889 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டும், 17 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும், தொற்று அறிகுறி உள்ள நான்காயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் பார்க்க: 'வந்தே பாரத் திட்டம்' டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட 326 பேர்!