காபுல்: ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபன்கள், மதவழக்கப்படி சட்டங்கள் ஏற்றப்பட்டு, தவறுகளுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அதாவது ஈரானில் உள்ள ஆட்சி முறையைக் கையாள தாலிபன்கள் திட்டமிட்டுள்ளனர். குடியரசு ஆட்சி முறையும், ஷரியத் சட்டங்களை கொண்ட ஆட்சி முறையும் சேர்ந்த கலவைதான் ஈரான் ஆட்சி.
ஒருவேளை ஈரான் ஆட்சி முறையை தாலிபான் கையில் எடுத்தால், அது அந்நாட்டு மக்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். ஷரியத் சட்டத்தில் ஜனநாயகத்திற்கு எள்ளளவும் வாய்ப்பு இருக்காது.
தாலிபான்கள் 1990களில் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்தபோது, பொதுவெளியில் மிக கொடூரமாக, மனிதாபிமானமற்ற முறையிலும் இப்படித்தான் மரண தண்டனைகளை நிறைவேற்றினர். மறுபடியும் இந்த தண்டனை முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
1990களின் பிற்பகுதியில் தாலிபன் ஆட்சியின்போது, இஸ்லாமிய சட்டத்தின்படி கடுமையான தண்டனைகளை துராபி என்பவர் செயல்படுத்தினார். இவர்தான் அப்போது நீதி அமைச்சராக இருந்தார். இப்போது சிறைச்சாலைகளின் பொறுப்பாளராக இருக்கிறார்.
தாலிபன் அமைப்பின் நிறுவனர் முல்லா நூருல்லாதுன் துராபி இது குறித்து செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டியில், "ஆப்கானிஸ்தானை தாலிபன் கைப்பற்றியுள்ள நிலையில், முன்பிருந்த அதே தண்டனைகள் மீண்டும் கொண்டு வரப்படும். மைதானங்களில் குற்றவாளிகளை நிற்க வைத்து நாங்கள் கொடுக்கும் தண்டனைகளை பிற நாட்டினர் விமர்சித்தார்கள்.
ஆனால், நாம் அவர்களது தண்டனை முறைகளையோ, சட்டங்களையோ விமர்சிக்கவில்லை. எங்கள் சட்டங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்றார்.
இதையும் படிங்க: தாலிபான் தலைவர்களுக்குள் முரண்பாடு