இது தொடர்பாக அந்நாட்டு உள் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் ஆரியன், "காரில் வந்த தற்கொலைப் படையினர், தலைநகரின் மேற்கு நுழைவு வாயில் அருகிலுள்ள ராணுவ சோதனைச் சாவடியை குறிவைத்தனர்.
இந்தக் குண்டுவெடிப்பில், மூன்று பேர் உயிரிழந்தனர், நால்வர் படுகாயமடைந்தனர். இதுபோன்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த மாத தொடக்கத்தில் காபூல் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு இயக்குநரகத்தில் குண்டு வெடிப்பு!