ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் ஆரம்பித்த காட்டுத் தீயானது தனது கோர தாண்டவத்தை காட்டிவருகிறது. இதுவரை காட்டுத்தீயால் 24 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கான வீடுகளை அழிக்கப்பட்டன, 5 மில்லியனுக்கும் அதிகமான ஹெக்டேர் (12.4 மில்லியன் ஏக்கர்) நிலங்கள் அடியோடு நாசமாகின. மேலும், ஆஸ்திரேலியாவை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்துகொண்டிருந்த கோலோ கரடி, கங்காரு உள்பட பல விலங்குகள் உயிரிழந்தன.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தீயில் கருகி உயிரிழந்த கங்காருவின் புகைப்படம் அனைவரையும் கண்கலங்கவைத்தது. இதுமட்டுமின்றி தீயணைப்புப் படையினர், மீட்புப் படை, பொதுமக்கள் என அனைவரும் தங்களால் முடிந்தவரை காயப்பட்ட விலங்குகளைக் காப்பாற்றி சிகிச்சையளித்துவருகின்றனர். கரடிகளை உயிரை பணயம்வைத்து பொதுமக்கள் காப்பாற்றும் காணொலி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான விலங்குகள் காப்பாகம் காட்டுத் தீயிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி, ஸ்டீவ் இர்வின் குடும்பத்தினர் தற்போதுவரை 90 ஆயிரம் விலங்குகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளித்து காப்பாற்றியுள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதுகுறித்து பின்னி இர்வின் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டது, 'எங்கள் வனவிலங்கு மருத்துவமனை முன்பைவிட மிகவும் பரபரப்பாக மாறியுள்ளது. நாங்கள் இதுவரை 90 ஆயிரம் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தோம். எங்களால் முடிந்தளவு பல உயிர்களைக் தொடர்ந்து காப்பாற்றுவோம்' என்றார். வனவிலங்குகளைப் பாதுகாக்கும் ஸ்டீவ் குடும்பத்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படிங்க:உயிருக்குப் போராடிய கண்ணாடி விரியன் - தையல் போட்டு காப்பாற்றிய மருத்துவர்!