இலங்கையில் உள்ள கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயம், சியோன் தேவாலயம், கிங்ஸ்பேரி தேவாலயம், சங்கிரி லா சின்னமன் கிராண்ட் நட்சத்திர விடுதி ஆகிய இடங்களில் இன்று காலை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இதில் 156 பேர் பலியானதாகவும், 100க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு இன்று மாலை நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் அனைத்தும் ஏப்ரல் 22 மற்றும் 23 தேதிகளில் இயங்காது என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை அமைச்சர் ஹர்சா டி சில்வா கூறுகையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். தாக்குதல் தொடர்பாக முப்படை தளபதிகள், பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.