ETV Bharat / international

வெளிநாடுகளிலும் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய தயார் - புடின்

author img

By

Published : Oct 30, 2020, 12:23 PM IST

மாஸ்கோ: கரோனா தடுப்பு மருந்தை வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்ய தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் தெரிவித்துள்ளார்.

Putin
Putin

உலகையே ஆட்டிப்படைக்கும் கோவிட்-19 காரணமாக இதுவரை 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ரேஸில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டிருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில்தான், கரோனாவுக்கு ஸ்புட்னிக் வி என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் ரஷ்யா அறிவித்தது. இருப்பினும், முறையாக மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் ரஷ்யா கரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால் பலரும் இது குறித்து சந்தேகத்தை எழுப்பினர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், "இந்தக் கரோனா தடுப்பு மருந்தை வெளிநாடுகளில் உற்பத்தி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். ரஷ்யாவில் இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களில் யாருக்கும் உடல்நலக்கோளாறு ஏற்படவில்லை.

நாங்கள் இதுவரை செய்ததைவிட மற்ற நாடுகளுடன் இணைந்து பணிபுரிய தயாராகவே உள்ளோம். பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே இங்கிலாந்தில் இருந்து தடுப்புமருந்துகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது எங்களுக்குத் தெரியும்.

எங்கள் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இரண்டு கரோனா தடுப்புமருந்தும் இதுவரை எவ்வித பாதிப்புமின்றி சிறப்பான முடிவுகளையே வெளிப்படுத்துகின்றன. ஏற்கனவே நாங்கள் இந்தத் தடுப்புமருந்துகளை அதிகளவில் உற்பத்தி செய்து, ரஷ்யாவின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பிவருகிறோம்.

இந்தாண்டு இறுதியில் அனைத்து மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்தை வழங்கும் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: புல்வாமா தாக்குதலை மேற்கொண்டது நாங்கள் தான் - ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.