மியான்மரில் புதிதாக ஆட்சியில் அமர்ந்த அரசுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இச்சூழலில், மியான்மர் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்து வைத்தது. இதனால், அந்நாட்டில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது.
மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மர் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டு உள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவித்துள்ளது.
ராணுவம் கையில் மியான்மர் உள்ளது பெரும் சலசலப்பை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் உரிய அனுமதியின்றி விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்து என்பதால், பேஸ்புக் தற்காலிகமாக முடக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இது மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பலரும் மனித உரிமை மீறல் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த ஆட்சி கைப்பற்றலுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல சர்வதேச தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் பைடன் கூறுகையில், " ஆட்சியை ராணுவம் கைப்பற்றி வைத்திருப்பதை உடனடியாக கைவிட வேண்டும். அடைத்து வைக்கப்பட்டுள்ள வழக்குரைஞர்கள், ஆர்வலர்கள், அலுவலர்களை விடுவிக்க வேண்டும், தொலைத்தொடர்பு மீதான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். வன்முறை ஏற்படாத வகையில் வைத்திருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு எண்டே இல்லையா... ஜெர்மனியில் நுழைந்த மற்றொரு வகை கரோனா!