வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையே, நேற்று ரஷ்யாவின் விளாடிவொஸ்டோக் நகரில் உள்ள தீவு ஒன்றில் உச்சி மாநாடு நடைபெற்றது.
சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த உச்சிமாநட்டில், கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டுவது; சர்வதேச அளவிலான பல்வேறு பிரச்னைகள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக வடகொரிய அரசின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், வடகொரியாவிற்கு வருமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னின் அழைப்பை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரியத் தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பு குறித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையே 2019 பிப்ரவரி மாதம், இரண்டாம் உச்சி மாநாடு நடைபெற்றது. ஆனால், எதிர்பாராதவிதமாக இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.