ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள புக்குஷியமா கடல்கரையை ஒட்டி நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு நடைபெற்ற சேத பாதிப்பு குறித்த நிலவரம் தற்போது வெளிவந்துள்ளது.
அதில், வடக்கு ஜப்பான் பகுதிகளில் நிலநடுக்கம் காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 90க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அங்குள்ள 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டது. மேலும், 37 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.
2011ஆம் ஆண்டு புக்குஷிமா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் புகுஷிமா அணு உலை பாதிக்கப்பட்டது. அங்கு அணு கசிவு ஏற்படவே அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வாழ தகுதியற்ற அபாயகரமான இடமாக மாறியது. தொடர்ந்து அந்த அணு உலை செயல்பாடு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்திலும் அணு உலைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு கதிர்வீச்சு ஏற்படுகிறதா என கண்காணித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஜப்பானில் அதிபயங்கர நிலநடுக்கம்... தடம் புரண்ட புல்லட் ரயில்...