மத்திய சீனாவில் பயணிகள் ரயில் ஒன்று, தண்டவாளத்தில் கிடந்த குப்பைகள் மீது மோதியது. இதனால் அந்த ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து சென்ஜோ என்னும் நகரத்தில் காலை 11.30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில், விபத்துக்கு காரணமாக இருந்த குப்பையானது தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் ரயில் தண்டவாளத்தில் விழுந்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
ஆனால் விபத்து ஏற்படும் முன்னரே நிலச்சரிவால் தண்டவாளத்தில் விழுந்த குப்பையைக் கண்ட ரயில் ஓட்டுநர் அவசரகாலத்தில் பயன்படுத்தும் பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்த முயற்சி செய்துள்ளார்.
இருந்தும் அதனால் எந்தப் பயனும் இல்லாமல் விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரயிலில் இருந்து ஐந்து பெட்டிகள் சரிந்தன.
இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீட்புப் பணிகளும் நடைப்பெற்றுவருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க...பிலிப்பைன்ஸ் விமான விபத்து - நோயாளி உட்பட அனைவரும் பலி!