நாய்பிடாவ்: மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கைதுசெய்து அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் வாரத்தில் இரண்டாவது முறையாக இணையம் முடக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி காலை 10மணிக்கு இணையம் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சமூகவலைதளங்களில் போலிச் செய்திகள் பரப்பியதாக குற்றஞ்சாட்டிய மியான்மர் ராணுவம், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களை முடக்கியுள்ளது. முன்னதாக, ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் புகைப்படங்கள், வீடியோக்களை மியான்மரைச் சேர்ந்த சமூக ஊடகப்பயனர்கள் வெளியிட்டிருந்தனர்.
மக்களின் உரிமைகளை குறைமதிப்பிற்கு மியான்மர் அரசு உட்படுத்தியுள்ளதாக ட்விட்டரின் செய்த்தொடர்பாளர் மியான்மரில் இணைய முடக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சிலர் ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலுள்ள சிலர் ட்விட்டரை அணுகுவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம், விரைவில் அது சரிசெய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மியான்மர் பேஸ்புக் முடக்கத்திற்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்!