ETV Bharat / international

'இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த உறுதுணையாக இருப்பேன்...!' - புடினுக்கு கிம் கடிதம்

பியோங்யாங்: ரஷ்யா அதிபர் புடினை, வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் இம்மாத இறுதியில் சந்திக்க உள்ள நிலையில், 'இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த நான் உறுதுணையாக இருப்பேன்' என புடினுக்கு எழுதிய கடிதத்தில் கிம் குறிப்பிட்டுள்ளார்.

கிம் ஜாங் உன்
author img

By

Published : Apr 21, 2019, 12:17 PM IST

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினை, வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் இம்மாத இறுதியில் சந்தித்துப் பேச உள்ளதாக ரஷ்யாவின் கிரம்ளின் மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், புடினுக்கு வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "முன்னாள் தலைவர்களால் உருவாக்கப்பட்ட இரு நாட்டு உறவுகளை மீண்டும் தொடர நாம் முன்வர வேண்டும்.

கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து உங்களுடன் பணியாற்றத் தயார். இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த உறுதுணையாக இருப்பேன். ரஷ்யா மக்கள் அனைத்து வளங்களை பெற்று வாழ வேண்டும் என விரும்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, பாதுகாப்புக் காரணங்களுக்காக இரு நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் இடம், தேதி வெளியிடப்படாமல் உள்ளது.

Intro:Body:

https://www.aninews.in/news/world/asia/kim-writes-to-putin-vows-to-strengthen-bilateral-ties20190420134307/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.