ETV Bharat / international

ஜப்பான் சொகுசு கப்பல் : புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு !

டோக்கியோ : கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில், புதிதாக 39 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

diamond prince japan quarantined cruise
diamond prince japan quarantined cruise
author img

By

Published : Feb 12, 2020, 2:01 PM IST

சீனாவில் 'கோவிட்-19' (கொரோனா வைரஸ்) எனப்படும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் காரணமாக இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

இதனிடையே, சீனாவில் இருந்து ஜப்பான் வந்த 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பல் வைரஸ் பாதிப்பு காரணமாக அந்நாட்டின் யோகோஹாமா துறைமுகத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தக் கப்பலில் சிக்கித் தவித்துவரும் முன்று ஆயிரத்து 700 பயணிகளில் புதிதாக 36 பேருக்கு 'கோவிட்-19' வைரஸ் பரவியுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த சொகுசு கப்பலில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : நிலைமை மோசமாவதற்குள் இந்தியர்களைக் காப்பாற்றுங்கள் - ஜப்பான் கப்பலிலிருந்து தமிழர் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.