ETV Bharat / international

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் வாங்கும் ஒப்பந்தம் ரத்து!

ஜகார்த்தா: கடந்த 5 மாதங்களில் இரண்டு முறை கோர விபத்தை போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் ஏற்படுத்தியுள்ள நிலையில், கருடா இந்தோனேஷியா ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த ரக விமானத்தை வாங்குவதில்லை என முடிவெடுத்துள்ளது.

author img

By

Published : Mar 22, 2019, 4:04 PM IST

போயிங் 737 மேக்ஸ 8 ரக விமானம் வாங்கும் ஒப்பந்தம் ரத்து

இந்தோனேஷியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் லையன் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் விபத்துள்ளானதில் 190 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, கடந்த 10 ஆம் தேதி எத்தியோப்பியாவில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான இந்த ரக விமானம் மீண்டும் விபத்துக்குள்ளானது. இதில் 35 நாடுகளை சேர்ந்த 157 பேர் பலியாகினார். இதன் விளைவாக போயிங் நிறுவனத்தின் இந்த ரக விமானத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழ தொடங்கியது.

இதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளும் போயிங் விமான சேவையை ரத்து செய்து உத்தரவிட்டது. அமெரிக்காவும் இந்த விமானத்தின் தகுதி சான்றிதழை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கருடா இந்தோனேஷியா ஏர்லைன்ஸ் நிறுவனம் 50 போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.