ETV Bharat / international

கட்டுக்கடங்காத கொரோனா; 4,000 உயிர்கள் பலி

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது நான்காயிரத்தை கடந்துள்ளது.

Corona
Corona
author img

By

Published : Mar 10, 2020, 9:46 AM IST

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே உலுக்கிவரும் நிலையில் பல்வேறு நாடுகளும் நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. உலக சுகாதார நிறுவனம் கொரோனா பாதிப்பை சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. மேலும், நோய் தடுப்பு குறித்து தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.

கொரோனா தொற்று பாதிப்பு பரவத்தொடங்கி சுமார் 45 நாள்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் உலகளவிலான கொரோனா பலி எண்ணிக்கை தற்போது நான்காயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 115 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும், மொத்தம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 422 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மேலும், கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழிப்புகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களிடமே அதிகம் உள்ளதாகவும், குறிப்பாக வயதானவர்களே இந்நோய் பாதிப்பால் உயிரிழந்ததாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: கொரோனா அரக்கனை தீயிட்டு எரித்த மும்பை மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.