துபாய்: உலகின் பல நாடுகளில், கரோனா இரண்டாம் அலை அதிக அளவில் பரவி தற்போது வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு நெறிமுறைகள் கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.
இதனால் சில நாடுகளில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில், கரோனா அதிகமுள்ள இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து விமான செவைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஷேக் மன்சூர் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையிலான, துபாயின் நெருக்கடி மற்றும் பேரழிவு மேலான்மை உச்சக் குழு இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
- இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வோர், அந்நாட்டால் அங்கீகரிக்கப்பட்ட சினோபார்ம், ஃபைசர், ஸ்பூட்னிக் வி, அஸ்ட்ராஜெனெகா ஆகிய தடுப்பூசியின் இரண்டு டோஸைப் செலுத்திக் கொண்டவர்கள், குடியிருப்பு விசா கொண்ட பயணிகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
- புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆர்டி பிசிஆர் சோதனையிலிருந்து எதிர்மறை சோதனை சான்றிதழ் வழங்க வேண்டும்..
- பயணிகள் துபாய் வந்ததும் மற்றொரு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
- இந்தியாவில் இருந்து பயணிகள் தங்கள் சோதனை முடிவைப் பெறும் வரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
- இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது!