சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு (WHO), ' சீனாவில் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ஹூபே மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 91 இறப்புகளும், திங்களன்று 103 இறப்புகளும் பதிவாகியுள்ளது.
அதேபோல் மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரோனா வழக்குகள் பதிவாகியிருக்கிறது. தற்போது வரை சீனாவில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றில் 24 அண்டை நாடுகளில் 319 பேர் பாதிப்படைந்து, ஒருவர் உயிரிழந்துள்ளார். கரோனா சோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக உலகளவில் 168 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் கரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பீதி - 'சிக்கன் சாப்பிடலாம்; பயப்பட வேண்டாம்'