சீனாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான அலிபாபா, சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள 'Fortune 500' (முன்னணி நிறுவனங்களுக்கான தரமதிப்பீடு) நிறுவனங்களில் ஒன்றாகும். உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாகவும் இது விளங்குகிறது.
அந்நிறுவனத்தைத் தோற்றுவித்த ஜாக் மா, தற்போது முக்கியப் பொறுப்புகளிலிருந்து விலகி, கல்விப் பணி, சமூக சேவை போன்றவற்றில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். இச்சூழலில் அலிபாபா நிறுவனத்திற்கு எதிராக முக்கிய நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
சீனாவின் சந்தையில், தான் மட்டுமே ஆதிக்கம் செய்யும் விதமாக அலிபாபா நிறுவனம் தனது கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக, அந்நாட்டின் சந்தை ஒழுங்காற்று அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, சீனாவின் எதிர்கால பொருளாதார கொள்கையை மனதில் கொண்டு அலிபாபாவின் அதிக்கம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் கவிழ்ந்த இஸ்ரேல் அரசு : 2 ஆண்டுகளில் நான்கு தேர்தல்