ETV Bharat / international

18 மாகாணங்களில் டெல்டா வகை கரோனா... கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

சீனாவில் 18 மாகாணங்களில் டெல்டா வகை கரோனா வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Aug 2, 2021, 4:40 AM IST

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் வூஹான் மாகாணத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், உருமாற்றம் அடைந்து பல நாடுகளில் ருத்ரதாண்டவம் ஆடியது. இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கரோனா வைரஸ், தற்போது சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

18 மாகாணங்களில் டெல்டா வகை கரோனா

கரோனா தொற்றை கட்டுப்படுத்தி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்த சீனா, தற்போது டெல்டா கரோனாவால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அங்கு 18 மாகாணங்களில் டெல்டா கரோனா பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 நாள்களில், பெய்ஜிங், ஜியாங்சு, சிச்சுவான் உட்பட 18 மாகாணங்களில், 300க்கும் மேற்பட்டோருக்கு டெல்டா கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜாங்ஜியாஜி சுற்றுலா தளத்திலிருந்து பெய்ஜிங் திரும்பிய மூவருக்கு, கரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன.

கரோனா
கரோனா

சுற்றுலா பயணிகளுக்கு கரோனா பரிசோதனை

கரோனா பாதிப்பு உள்ள மாகாணங்களிலிருந்து ரயில், விமானம், வாகனங்கள் வழியாகப் பொதுமக்கள் பெய்ஜிங் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

அச்சமயத்தில், சுமார் 11 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் ஜாங்ஜியாஜிவில் இருந்ததால், அங்கிருக்கும் அனைத்து சுற்றுலா தளமும் மூடப்பட்டது. அங்கிருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே, வெளியேற அனுமதித்தனர்.

விமானங்களுக்கு தடை

ஜாங்ஜியாஜியை போல, நான்ஜிங் நகரில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. நான்ஜிங் நகருக்கு வந்த விமானத்தில் பணிபுரிந்த துப்புரவு பணியாளர் ஒருவருக்கு தொற்று முதல் முதலில் கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அங்கிருந்து வரும் விமானங்கள் அனைத்து நிறுத்தப்பட்டது. அங்கு வசிக்கும் 90 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது.

நான்ஜிங், ஜாங்ஜியாஜி மட்டுமின்றி கரோனா பாதிப்பு இருக்கும் மாகாணங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.சீனாவில் இதுவரை 93 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, 1,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆப்கன் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.