ETV Bharat / international

எந்த வீரரையும் நாங்கள் பிடித்து செல்லவில்லை - சீனா விளக்கம் - india china border news live

பெய்ஜிங் : கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலின்போது இந்திய வீரர்கள் யாரையும் தாங்கள் பிடித்து செல்லவில்லை என்று சீனா விளக்கமளித்துள்ளது.

Galwan valley face-off
Galwan valley face-off
author img

By

Published : Jun 19, 2020, 6:27 PM IST

லடாக் எல்லைப் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீனப் படைகளை திரும்ப பெறும் நடவடிக்கையின்போது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சில இந்திய வீரர்களைக் காணவில்லை என ’த நியூயார்க் டைமஸ்’ செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய வீரர்களை சீனா கைது செய்திருக்கலாம் என்ற தகவலும் இணையத்தில் காட்டுத் தீயாக பரவியது.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் யாரையும் பிடித்து செல்லவில்லை என்று சீனா தற்போது விளக்கமளித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், "இந்திய வீரர்கள் யாரையும் சீனா பிடித்துச் செல்லவில்லை.

கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் யார் மீது தவறு இருக்கிறது என்று அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். இந்தப் பிரச்னைக்கு முழுக் காரணம் இந்தியாதான். தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைத் தணிக்க இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது" என்றார்.

முன்னதாக, வீரர்கள் காணவில்லை என்று வெளியான செய்திக்கு இந்திய ராணுவமும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆயுதமின்றி டிராகன் குகையில் நுழைந்த இந்திய படை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.