ETV Bharat / international

Australia Welcomes: தடுப்பூசி போட்டா வாங்க - வரவேற்கும் ஆஸ்திரேலியா!

author img

By

Published : Nov 23, 2021, 1:31 PM IST

டிசம்பர் 1ஆம் தேதிமுதல், வெளிநாட்டு நுழைவு இசைவு சீட்டு (VISA) வைத்திருப்பவர்கள் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தியிருந்திருந்தால் மட்டும் ஆஸ்திரேலியாவுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் (Australia Welcomes) என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், Australian prime minister Scott Morrison
Australian prime minister Scott Morrison

சிட்னி: கரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மே மாதம் ஆஸ்திரேலியாவின் பன்னாட்டு எல்லை அடைக்கப்பட்டது. குடிமக்களில் குறிப்பிட்ட அளவினருக்கும், நிரந்தர குடியுரிமை வைத்திருப்பவர்களுக்கும் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.

சில நாள்களாக இந்த விதிகளில் அந்நாட்டு அரசு தளர்வுகளை அறிவித்து வந்தது. விக்டோரியா மாகாணத்தில் (Victoria State) மட்டும் கரோனா தொற்று நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. ஆனால், பிற பகுதிகளில் கரோனா தொற்று பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.

அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மட்டும்

எனவே, வரும் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து தகுதியான வெளிநாட்டு நுழைவு இசைவு சீட்டு (VISA) இருக்கும் மாணவர்கள், தொழிலாளர்கள், போன்றோர் முழுமையான தடுப்பூசியை செலுத்தியிருக்கும்பட்சத்தில் (ஆஸ்திரேலியா மருந்து நிர்வாக அமைப்பால் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசிகள் மட்டும்) ஆஸ்திரேலியா வரலாம் (Australia Welcomes) என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று (நவம்பர் 22) செய்தியாளர் சந்திப்பில் ஸ்காட் மாரிசன் கூறியதாவது, "திறன்சார் தொழிலாளர்கள், மாணவர்கள் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்புவது பொருளாதார மீட்சிக்கு மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும். தென் கொரியா, ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் முழுமையான தடுப்பூசி செலுத்தியிருந்தால் ஆஸ்திரேலியா வரலாம்" என்று தெரிவித்திருந்தார்.

கல்வித் துறை ஊக்கம் பெறும்

வெளிநாட்டு மாணவர்கள் அதிகமாகப் பயிலும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் திரும்புவதால் அந்நாட்டின் கல்வித் துறை பெரிதும் ஊக்கம்பெறும்.

மேலும், ஒரு லட்சத்து மாணவர்கள் உள்பட மொத்தம் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேர் ஆஸ்திரேலியாவுக்கான நுழைவு இசைவு சீட்டை வைத்துள்ளதாக ஆஸ்திரேலியா அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

நுழைவு இசைவு சீட்டு இல்லாத அகதிகளுக்கும் இந்த அனுமதி செல்லுபடியாகும் எனக் கூறப்படுகிறது. பயணத்தின்போது, பயணத்துக்கு மூன்று நாள்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் பண மழை.. வெள்ளிக்கிழமை அதிகாலை கண்ணை திறந்த லட்சுமி!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.