ETV Bharat / international

2020 புத்தாண்டே வருக... வருக...! - வானை வண்ணமயமாக்கிய வாணவேடிக்கைகள் - 2020 Happy New Year

2020 புத்தாண்டை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வாணவேடிக்கைகள், கொண்டாட்டங்களுடன் வரவேற்றன.

new year,  2020 புத்தாண்டு
new year
author img

By

Published : Jan 1, 2020, 5:35 AM IST

பசிபிக் நாடுகள்

நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் உள்ள பெருநகரங்கள் வழக்கம்போல வாணவேடிக்கைகளால் வளிமண்டலத்தை அலங்கரித்தனர். இதனைக்காண குடும்பத்துடன் திரளாக வந்த மக்கள் அன்னாந்து பார்த்து புத்தாண்டை வருக வருக என வரவேற்றனர்.

கொரியாக்கள்

வடகொரியர்கள் தங்களுக்கே உரிய பாணியில் பாரம்பரிய கொரிய பாடலைப் பாடியும், வாணவேடிக்கைகள் நடத்தியும் புத்தாண்டை வரவேற்றனர். தலைநகர் பியாங்யாங்கில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர்.

தென்கொரிய தலைநகர் சியோலின் புகழ்பெற்ற டவுன்டவுண் ஸ்டேஷனில் கூடிருந்த ஆயிரக்கணக்கானோர் தங்கள் செல்போன்களில் டார்ச் அடிக்க, சிட்டி ஹாலில் பாரம்பரிய மணியை அடித்து 2019 குட்பை சொல்லி, புத்தாண்டை ஏற்றுக்கொண்டனர்.

ஹாங்காங்

ஆண்டின் பெரும் பகுதியை போராட்டத்திலேயே செலவழித்த ஹாங்காங்வாசிகள் பல்வேறு பகுதிகளிலும் திரளாகக் கூடி ஒலி-ஒளி நிகழ்ச்சிகளை நடத்தியும், வாணவேடிக்கைளை நிகழ்த்தியும் ரசித்தபடி புத்தாண்டில் அடியெடுத்துவைத்தனர். அடுத்தக்கட்ட போராட்டத்துக்கு தயாராகிவிட்டார்கள் போல!

தைவான்

தலைநகர் தைபேயில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற 101 கோபுரத்திலிருந்து வானை நோக்கி வண்ண வண்ணமான வாணவேடிக்கைகள் கிளம்பி ஆகாயத்தை அழகாக்கின, சுற்றியிருந்த தாய்வானியர்கள் புத்தாண்டை இன்மனதோடு வரவேற்றனர்.

சீனா
சீன தலைநகர் பெய்ஜிங்கில், 2020 விண்டர் ஒலிம்பிக்ஸ் போட்டிய நடக்கும் மைதானத்தில், ஆலங்கார ஆடைகள், ஜெர்சிகளுடன் இசைக்கேற்றார்போல் கலைஞர்களும், மக்களும் உற்சாகமாய் ஆட புத்தாண்டை பிரமாண்டமாய் வரவேற்றனர். இதுதவிர, நகரின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த ஒலி-ஒளி நிகழ்ச்சிகள் நகரத்தை வண்ணமயமாய் காட்சியளிக்கச் செய்தது.

இந்தியா

தலைநகர் டெல்லி, முக்கிய நகரங்களான மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு விழாக்கோலம் பூண்டது. ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்தை பரிமாறிக்கொண்டனர். உயர்தர உணவக விடுதிகளில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டமாகக் கச்சேரி களைகட்டியது.

Intro:Body:

New year borning countries

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.