இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா மாகாணத்தின் கடற்கரையோரப் பகுதியில் நேற்று (ஏப்.10) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மலாங் நகருக்கு தென்மேற்கே 45 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலச்சரிவு ஏற்படக்கூடிய பாறைகள் அமைந்த பகுதிகள் அருகே வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக தேசியப் பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்திற்கு 300க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
ஆனால், இந்நிலநடுக்கம் ரிக்டரில் 6.7ஆகப் பதிவாகி உள்ளது என இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்தோனேசியாவில் கடந்த 2018ம் ஆண்டு 7.5 என்ற அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 4,300 பேர் உயிரிழந்தனர்.