ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது லக்மான் மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள அலிஷிங் மாவட்டத்தில் உள்ள தலைமை காவல் நிலையம் அருகே இன்று காலை திடீரென பயங்கர சத்தத்தோடு குண்டுவெடித்து.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 6 மணி அளவில் காவல் துறை அருகே டிரக்கில் வந்த தற்கொலைப் படையினர் காரை வெடிக்கச் செய்ததாக, டோலோ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் வாசிங்க: சிரியா அகதிகள் 30 லட்சம் பேரை திருப்பி அனுப்ப துருக்கி முடிவு
இதில், இரண்டு அரசு பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 26 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோருக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தத் தாக்குதலுக்கு தற்போது தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானில் தொடர் பயங்கரவாதி தாக்குதல்கள் நடைபெற்றுவருகின்றன. காபூலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றதினால், அவர்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் துண்டித்துக்கொண்டார்.