கராச்சியில் நேற்று ( ஞாயிற்றுகிழமை) இரவு புழுதி புயல் வீசியது. இதில் மூன்று பேர் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை வரை நீடித்த புழுதி புயலில் கட்டங்கள் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாகிஸ்தான் வானிலை மைய இயக்குநர் சர்தார் ஷர்பாராஸ்ஸ, " நேற்று இரவு ஏற்பட்ட இந்த புழுதி புயலில் எதிர்பார்த்தை விட வலிமையானது. மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. நாளை மாலை நகர்புற பகுதியை விட்டு முழுமையாக புழுதி காற்று வெளியேறும். இதன் காரணமாக லேசான மழையும் பெய்யக்கூடும் " என தெரிவித்தார்.