கடந்த பிப்ரவரி 29ஆம் தேதியன்று, அமெரிக்கா-தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்பிறகு, அமெரிக்காவும் தனது படைகளைப் படிப்படியாக திரும்பப் பெற்றுக்கொண்டது. ஆனால், அமைதி ஒப்பந்தம் கையெழுத்திட்டதிலிருந்து தற்போது வரை ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் வீர்ரகள் உயிரிழந்துள்ளதாக அந்நாடு அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பிப்ரவரி 29ஆம் தேதி முதல் ஜூலை 21ஆம் தேதி வரை ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 ஆயிரத்து 708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3,560 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 6,781 பேர் காயமடைந்துள்ளனர். எஞ்சியவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்” என்றார்.