இது குறித்து, ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், வெனிசுலா நாட்டின் வெளியுறவு அமைச்சக வலைத்தளங்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை முடக்கப்பட்டும் என கூறப்பட்டுள்ளது. வெனிசுலா நாட்டை இலக்காக கொண்டு ஹேக்கர்கள் தாக்குதல்கள் நடத்தி வருவது சர்வதேச சைபர் குற்றம் என வெனிசுலா நாட்டின் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் அர்ஜென்டினா, பெல்ஜியம், சிலி, மெக்ஸிகோ, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கடுத்து ரஷ்ய நாட்டில் செயல்படும் வெளியுறவு அமைச்சகத்தின் வலைதளமும் நேற்று முதல் முடக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதியிலிருந்து இந்த வலைதளங்கள் தாக்கப்படுவது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நிக்கோலஸ் மடுரோ வெனிசுலா நாட்டின் அதிபராக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஜுவான் கெயிடோ இடைக்கால அதிபராக பொறுப்பேற்றதும் அதற்கு உலக நாடுகள் அதரவளித்து வருவது போர் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.