அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது தீவிரமடைந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 205 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் ஒன்பதாயிரத்து 464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் 50 மாகாணங்களிலும் கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் உயிரிழப்பு 155ஆக அதிகரித்துள்ளது.
நோயைத் தடுக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மேற்பார்வையில் அந்நாட்டு அரசு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் செய்துவருகின்றது. இந்நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மரியோ பலார்ட் என்பவருக்கும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பென் மெக்ஆடம்ஸ் என்பவருக்கும் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பிலிருந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ்: சீனாவுடன் மோதும் ட்ரம்ப்