அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக ஜனநாயகக் கட்சி (எதிர்க்கட்சி) சார்பில், அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜோ பிடன் தனக்கு ஆதரவாகப் பேசுவது, போன்ற வீடியோ ஒன்றை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் ரீ ட்வீட் செய்திருந்தார்.
இந்த வீடியோவானது ஜோடிக்கப்பட்டதெனவும், மக்களை திசைதிருப்பும் நோக்கில் பதிவிடப்பட்டதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டரில் பொய்யான, ஜோடிக்கப்பட்ட, தவறான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் பரவுவதைத் தடுக்க, அந்நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்நிலையில், இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் கூட, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மைக்கேல் ப்ளூம்பெர்க்கிற்கு ஆதரவாக தவறானத் தகவல்களைப் பரப்பி வந்த பல்வேறு ட்விட்டர் கணக்குகள் ரத்து செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : மழையையும் பொருட்படுத்தாது சிஏஏ போராட்டத்தில் பங்கேற்ற பெண் உயிரிழிப்பு