ETV Bharat / international

டிக்டாக், வி சாட் டவுன்லோடு செய்ய தடை - ட்ரம்ப் அரசு

தேசப் பாதுகாப்பைக் காரணம் காட்டி டிக்டாக், வி சாட் செயலிகளை தடைசெய்ய அமெரிக்க அரசு முடிவுசெய்துள்ளது.

Trump
Trump
author img

By

Published : Sep 18, 2020, 9:32 PM IST

சீனா செயலி நிறுவனங்களான டிக் டாக், வி சாட் ஆகியவற்றை வரும் ஞாயிறு முதல் தடைசெய்ய அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது. அமெரிக்கா - சீனா இடையே மோதல்போக்கு நிலவிவரும் நிலையில், தேசப் பாதுகாப்பைக் காரணம் காட்டி இந்த முடிவை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.

காணொலி பகிர்வு செயலியான வி சாட் வரும் ஞாயிறு முதல் நிச்சயம் தடைசெய்யப்படும் எனவும், இறுதி நிமிடத்தில் டிக் டாக் நிறுவனத்துடன் அதிபர் ட்ரம்ப் ஒப்பந்தம் மேற்கொள்ளும்பட்சத்தில் அந்நிறுவனத்திற்குத் தடை இருக்காது என வர்த்தகத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

10 கோடிக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை பயன்படுத்திவருகின்றனர். குறிப்பாக அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் டிக்டாக் பிரபலமாக உள்ளது.

முன்னதாக, டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட சீனாவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட செயலிகளை இந்தியா அண்மையில் தடைசெய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா பயணியுடன் பறந்த ஏர் இந்தியா விமானம் - துபாய்க்குள் நுழைய 15 நாட்கள் தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.