ETV Bharat / international

கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுத்த சீனா: விமானங்களை அனுமதித்த அமெரிக்கா!

அமெரிக்காவில் சீன விமானங்களைக் குறைந்த அளவில் அனுமதிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Trump administration  allows limited flights from china

author img

By

Published : Jun 6, 2020, 1:21 AM IST

குறைந்த அளவிலான சீன விமானங்களை அமெரிக்காவில் அனுமதிப்பதாக ட்ரம்பின் நிர்வாகம் நேற்று (ஜுன் 5) தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தடுப்புக்கான கட்டுப்பாடுகளின் காரணமாக சீனா, அமெரிக்க விமானங்கள் அந்நாட்டில் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் சீன விமானங்கள் அமெரிக்காவில் நுழைய முடியாது என எச்சரித்தது.

இந்நிலையில் கட்டுப்பாடுகளை, சீனா தளர்த்தியதைத் தொடர்ந்தும், அதிக அமெரிக்க விமானங்கள் சீனாவில் அனுமதிக்கப்பட்டன. பின், அமெரிக்கா, குறைந்த அளவிலான சீன விமானங்களை அனுமதிப்பதாக முடிவு எடுத்திருக்கிறது.

முன்னதாக கடந்த புதன் கிழமையன்று (ஜுன் 3) விமானங்கள் சீனாவுக்குச் செல்லவும், அங்கிருந்து வரவும் அமெரிக்கா தடை விதித்தது. அந்த தடை ஜுன் 16ஆம் தேதிக்குப் பின்னர் இருக்கும் எனவும் தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவியது. தற்போது சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பயணம் செய்ய நான்கு விமான நிறுவனங்கள் உள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.