ETV Bharat / international

எனது வெற்றியைத் தடுக்கவே கரோனா தடுப்பூசி அறிவிப்பு திட்டமிட்டு தடுக்கப்பட்டது- ட்ரம்ப் குற்றச்சாட்டு - ஜோ பைடன்

வாஷிங்டன்: தான் தேர்தலில் வெற்றிப்பெறக் கூடாது என்பதற்காகவே கரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ),  ஃபைசர் ஆகியவை தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனது வெற்றியை தடுக்கவே கரோனா தடுப்பூசி அறிவிப்பு திட்டமிட்டு தடுக்கப்பட்டது- டிரம்ப் குற்றச்சாட்டு

author img

By

Published : Nov 10, 2020, 5:17 PM IST

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸிற்கான தடுப்பூசியை உருவாக்குவதில் பல்வேறு நாடுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் யாரும் எதிர்பாரா வண்ணம் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.

கரோனாவிற்கான தடுப்பு மருந்தை தேர்தலுக்கு முன்பாக விரைவில் அறிவித்து, ஓட்டு வங்கியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற டொனால்ட் ட்ரம்பின் திட்டம் இறுதிவரை கைகூடாமல் போனது. விளைவு ட்ரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், தேர்தல் முடிந்து ஐந்து நாள்களே ஆன நிலையில், கரோனாவிற்கு தடுப்பூசி தயாராக உள்ளதாக அந்நாட்டின் முன்னணி மருந்து நிறுவனமான ஃபைசர் அறிவித்துள்ளது. இந்த மருந்து கரோனா தொற்றிலிருந்து 90 விழுக்காடு பாதுகாக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானவுடன் ட்ரம்ப் தனது அதிருப்தி தெரிவித்தத்தோடு குற்றம்சாட்டி ட்விட் செய்துள்ளார். அதில், “அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஜனநாயகக் கட்சியினர் தேர்தலுக்கு முன்னர் தடுப்பூசி குறித்த அறிவிப்பு வெளியாவதை விரும்பவில்லை. இதன்மூலம் நான் வெற்றிப்பெற்று விடுவேன் என்பதால், தேர்தல் முடிந்து ஐந்து நாள்களுக்குப் பிறகு கரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது” என்று அதிபர் ட்ரம்ப் ட்விட் செய்துள்ளார்.

"ஜோ பைடன் அதிபராக இருந்திருந்தால், இன்னும் நான்கு வருடங்களுக்கு நீங்கள் தடுப்பூசியை உருவாக்கி இருக்க மாட்டீர்கள். @US_FDA இதனை இவ்வளவு விரைவாக அங்கீகரித்திருக்காது. அதிகாரத்துவம் மேலும் மில்லியன் கணக்கான அமெரிக்க உயிர்களை அழித்திருக்கும்!" என்று ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட் செய்துள்ள புதிய அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் "கரோனா தடுப்பூசி உருவாக்க உதவிய புத்திசாலித்தனமான பெண்கள், ஆண்களை நான் வாழ்த்துகிறேன். அதே நேரத்தில், கரோனாவிற்கு எதிரான போரின் முடிவுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன” என்று கூறியுள்ளார்.

கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரிய பாய்ச்சலாக இருக்கக்கூடிய தடுப்பூசி குறித்த நல்ல செய்தியை உலகம் வரவேற்கிறது என்று ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசி கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.