ETV Bharat / international

சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையில் பெரும்வெற்றி - ட்ரம்ப் மகிழ்ச்சி! - trump

வாஷிங்டன்: மறைமுக வர்த்தகப்போரில் ஈடுபட்டுவந்த அமெரிக்க - சீனா இடையேயான பேச்சுவார்த்தை மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்
author img

By

Published : Apr 6, 2019, 5:50 PM IST

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவுக்கும், அமெரிக்கர்களுக்கும் மட்டுமே பிரதான முக்கியத்துவம் வழங்கப்படும் என அதிரடி நடவடிக்கைகளைச் செய்துவருகிறார். குறிப்பாக வர்த்தகம் சார்ந்த விவகாரங்களில் மற்ற நாடுகளுக்கு விதிக்கப்படும் வரிகள் தொடர்பாக முன்பிருந்த அதிபர்கள் போல் இல்லாமல் கறாரான நடைமுறைகளை ட்ரம்ப் பின்பற்றினார். இதனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மறைமுக வர்த்தகப்போர் கடந்த ஒரு வருடமாகவே நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், இரு நாடுகளின் மோதல்களால் மற்ற உலகநாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில் இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவெடுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, சீன நாட்டின் துணைத் தலைவர் லியூ ஹியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இதில் சுமார் 360 பில்லியன் டாலர் அளவிலான இருபெரும் நாடுகளின் வர்த்தகம் மற்றும் வரிவிதிப்பு குறித்து சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாவது, 'சீனாவுடனான சந்திப்பு மிகப்பெரும் வெற்றியை எட்டியுள்ளது. இருநாடுகளும் சுமுக உறவைப்பேன உள்ளன. ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு இன்னும் இறுதியாகவில்லை, இருப்பினும் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புவதாக' கூறியுள்ளார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.