ETV Bharat / international

இந்தியா - அமெரிக்கா உறவு எப்படிப்பட்டது? - சிறு தொகுப்பு - அதிபர் ட்ரம்ப்

இந்திய அமெரிக்க உறவு என்பது இவ்வளவு காலம் இனிப்பும் கசப்பும் கலந்த ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. 1950களில் இந்தியாவுக்கு எதிர் நிலைப்பாட்டிலிருந்த அமெரிக்கா, 2005ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மென்பொருள், ஆராய்ச்சி, சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் அமெரிக்காவுக்கு இந்தியாவின் பங்களிப்பு என்பது அளப்பரியது. அதற்குப் பதிலாக சர்வதேச பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சி, அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்தது.

The Indispensable Indo-US partnership
The Indispensable Indo-US partnership
author img

By

Published : Feb 23, 2020, 10:11 AM IST

அமெரிக்க-தெற்கு ஆசியா இடையேயான உறவு

1978ஆம் ஆண்டுக்குப் பின், அமெரிக்கவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன் 2000ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார். 1998ஆம் ஆண்டு இந்தியா அணுஆயுதச் சோதனையில் ஈடுபட்டதும் எழுந்த சர்வதேச அழுத்தத்தைக் குறைக்க இது உதவியது. இருப்பினும், இந்தியா அணுஆயுதச் சோதனையில் ஈடுபடக்கூடாது என்று பில் கிளின்டன் அரசு தொடர்ந்து வலியுறுத்தியே வந்தது.

இந்திய-அமெரிக்கா நாடுகளுக்கிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தம் இந்தப் பயணத்தின்போது கையெழுத்தானது. இந்தியாவின் பொருளாதாரம் வளரத் தொடங்கிய அந்த நேரத்தில், கிளின்டனின் வருகையானது அமெரிக்கா பாகிஸ்தானிடமிருந்து விலகி இந்தியா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததையே காட்டியது.

2006ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தார். அவரும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் அணுசக்தி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களை இறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து 2007ஆம் ஆண்டு அணுஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்ந்தத்தைத் தாண்டி அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள இந்தியாவுக்கு மட்டும் அனுமதியளித்தது.

2007ஆம் ஆண்டு இந்தியா அமெரிக்கவுக்குமிடையே கையெழுத்தான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் வலுப்பெற உதவியது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், பல ஆண்டுகள் தடைக்குப் பின், இந்திய மாங்காய்கள் அமெரிக்கா சென்றன.

புஷ், மன்மோகன் சிங் ஆகியோருக்கிடையே 2006ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே மாங்காய்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தகம் இரட்டிப்பானது. இதற்குப் பதிலாக, அமெரிக்காவிலிருந்து ஹார்லி-டேவிட்சன் மோட்டார் பைக்குகளை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தியது.

பொருள்கள் மற்றும் சேவைகளில் இருதரப்பு வர்த்தகம் 2006ஆம் ஆண்டு சுமார் 45 பில்லியன் டாலராக இருந்தது. இது 2010ஆம் ஆண்டு 70 பில்லியன் டாலராக உயர்ந்தது என்று அமெரிக்க பொருளாதார பகுப்பாய்வு பணியகம் தெரிவித்தது.

2010ஆம் ஆண்டு அமெரிக்காவும் இந்தியாவும் பாதுகாப்பு குறித்து முக்கிய விவாதத்தில் ஈடுபட்டன. அதைத்தொடர்ந்து 2010ஆம் ஆண்டு இந்தியாவின் உயர்மட்ட அலுவலர்கள், அமெரிக்காவுக்குச் சென்றனர். அதைத்தொடர்ந்து, அப்போதைய அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஹிலாரி கிளின்டன் இந்தியாவை "ஒரு தவிர்க்க முடியாத கூட்டாளி" என்று குறிப்பிட்டார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரு நாடுகளுக்குமிடையேயான உறவை, "இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒரு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை" என்றார்.

இதையும் படிங்க: அதிக வெப்பநிலையை தாங்குமா அமெரிக்காவின் முதல் குடும்பம்?

பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை ஆதரித்த அமெரிக்கா

2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதிபரின் வருகையைத் தொடர்ந்து பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவளித்தது.

இந்தப் பயணத்தின்போது ஒபாமாவுடன் 14.9 பில்லியன் டாலர் வர்த்தக ஒப்பந்தங்களை ஒபமா அறிவித்தார். இருப்பினும், இந்திய சந்தைகளை எளிதில் அணுக முடிவதில்லை, அணுசக்தி ஒத்துழைப்பைச் சுற்றியுள்ள பிரச்னைகள் இரு நாடுகளுக்குமிடையான பேச்சுவார்த்தையில் அவ்வப்போது சிக்கல்களை எழுப்பின.

இந்தியா - அமெரி்க்கா உறவு!

ஒபாமாவின் இரண்டாவது இந்திய வருகை

2015ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க ஒபாமா இரண்டாவது முறையாக இந்தியா வந்தார். உலகில் இரு பெரும் ஜனநாயகத்தின் உறவு குறித்து குறிப்பிட்ட அவர், "இந்தியாவின் சிறந்த கூட்டாளியாக அமெரிக்கா விளங்கலாம்" என்றார்.

அப்போது, ஒபாமாவும் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க-இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த உதவும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஆஷ்டன் கார்டரும், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரும் அமெரிக்க-இந்தியா பாதுகாப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்தை மேலும் பத்து ஆண்டுகள் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பாதுகாப்பு கூட்டாளி

நரேந்திர மோடியின் 2016ஆம் ஆண்டு அமெரிக்க பயணத்தின்போது, அமெரிக்கா, இந்தியாவை முக்கியப் பாதுகாப்புக் கூட்டாளியாக அறிவித்தது, இது வேறு எந்த நாடுகளுக்கும் இல்லாத சிறப்பு அந்தஸ்து ஆகும்.

2015ஆம் ஆண்டில் பத்து ஆண்டுகள் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம், 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டமானது. இது பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுக்குச் சில சாதகங்களை வழங்கின.

அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையே வளர்ந்துவரும் ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை பாராட்டி பேசினார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்காவும் இந்தியாவும் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பின் விரிவான ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதையும் படிங்க: வைஷ்ணவ ஜனதோ காந்தியின் கீதமான கதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.