அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் இருந்து விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்புவது வழக்கமான ஒன்று. இதனை அடுத்து, அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் தயாரித்த டிராகன் எனும் விண்கலம் மூலம் முதன்முறையாக நாசாவின் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு நேற்று அனுப்பட்டனர்.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஹாப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷெனான் வால்கர் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் மற்றும் சொய்சி நொகூச்சி எனும் ஜப்பானிய வீரர் ஒருவர் உட்பட 4 வீரர்களை ஏந்தியவாறு ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன் ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஃபால்கன் ராக்கெட்டில் இருந்து நேற்று வெற்றிகரமாக பிரிந்த டிராகன் கேப்சூல் இந்திய நேரப்படி, இன்று காலை 9:31 மணி அளவில் சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைந்தது.
-
Welcome to the @Space_Station, Crew-1! The @SpaceX Crew Dragon "Resilience" successfully docked at 11:01pm ET, with @Astro_Illini, @AstroVicGlover, Shannon Walker, & @Astro_Soichi aboard. After the hatch opening, they'll join the crew on the orbiting lab: https://t.co/V5EKeq76Ml pic.twitter.com/x2OeNkZpWJ
— NASA (@NASA) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Welcome to the @Space_Station, Crew-1! The @SpaceX Crew Dragon "Resilience" successfully docked at 11:01pm ET, with @Astro_Illini, @AstroVicGlover, Shannon Walker, & @Astro_Soichi aboard. After the hatch opening, they'll join the crew on the orbiting lab: https://t.co/V5EKeq76Ml pic.twitter.com/x2OeNkZpWJ
— NASA (@NASA) November 17, 2020Welcome to the @Space_Station, Crew-1! The @SpaceX Crew Dragon "Resilience" successfully docked at 11:01pm ET, with @Astro_Illini, @AstroVicGlover, Shannon Walker, & @Astro_Soichi aboard. After the hatch opening, they'll join the crew on the orbiting lab: https://t.co/V5EKeq76Ml pic.twitter.com/x2OeNkZpWJ
— NASA (@NASA) November 17, 2020
3 மாதங்களுக்கு முன்பு, இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், முதல்கட்டமாக நான்கு விண்வெளி வீரர்கள் தற்போது அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்வரை இருந்து தங்களது பணியை மேற்கொள்வார்கள். இதனை அடுத்து, இரண்டாம் கட்டமாக புதிய குழு ஏப்ரல் மாதம் அனுப்பப்படுவார்கள்.
இதையும் படிங்க:
சாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்ட முதல் தனியார் விண்கலம்