அமெரிக்கா-மெக்ஸிக்கோ எல்லையில் சுவர் எழுப்பும் நிதியை நாடாளுமன்ற ஒப்புதலின்றி பெறுவதற்கு, அந்நாட்டு அதிபர் டொலான்டு டிரம்ப், கடந்த மாதம் (பிப்ரவரி), அவசரநிலை பிரகடனப்படுத்தினார்.
இந்த முடிவிற்கு, அவருடைய குடியரசுக் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், கலிஃபோர்னியா உள்ளிட்ட 16 மாகாணங்கள் டிரம்பின் ஆணைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தந்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் டிரம்பின் ஆணைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, தற்போது நாடாளுமன்ற மேல்சைபையும்( செனட்) நிறைவேற்றியுள்ளது.
அதில், டிரம்பின் ஆணைக்கு ஆதரவாக 49 பேரும், எதிராக 51 பேரும் வாக்களித்துள்ளனர். எதிராக வாக்களித்தவர்களுள் டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த 12 எம்பிகளும் அடக்கம் என்பது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து இந்த தீர்மானம் டிரம்பின் கவனத்திற்குச் கொண்டு செல்லப்படும்.
இதுகுறித்து, அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபை சபாநாயகர் நான்சி பெலோசி (Nanci Pelosi) கூறும்போது, "டிரம்பின் அவசர நிலை பிரகடன ஆணை சட்டத்திற்கு புறம்பான, அதிகார துஷ்பிரயோகமாகும். அது அரசியல் சாசன சட்டத்திற்கும், அதிகாரப் பகிர்வு கொள்ளைகளை அடிப்படையில் மாற்றவல்லதாகும்" என்றார்.
"இந்த அவசர நிலை பிரகடனம், வருங்கால அதிபர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அமையும் அபாயம் உள்ளது" என செனட் உறுப்பினர் மிட் ரோப்னே தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஏமன் உள்ளிட்டுப் பேரில் அமெரிக்காவின் தலையீட்டை முறித்து கொள்ள வேண்டும் என செனட் வாக்களித்தது.
எனினும், டிரம்பின் ஆணைக்கு எதிராக மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு செனட் வாக்களித்திருந்தால் மட்டுமே அதனைத் தடைசெய்யமுடியும். அப்படி நடக்காததால், எந்த பிரச்னையுமின்றி அமெரிக்காவில் அவசரநிலை தொடரும்.
இந்தியாவைப் போல் அமெரிக்கா அவசரநிலையானது, பேரிடரின் போது உதவி திரட்டுவது, நிதி சம்பந்தமான விஷயங்கள் உள்ளிட்டைவகளில் மட்டும் அமெரிக்க அதிபர் முழு சுதந்திரத்துடன் செயல்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.