அமெரிக்காவில் வேலைபார்க்கும் இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு உதவும்விதமாக புதிய சட்டம் ஒன்றை அமெரிக்க மேலவை தற்போது இயற்றியுள்ளது. அமெரிக்காவில் வேலைபார்க்கும் வெளிநாட்டவர்கள் அந்நாட்டின் குடியுரிமை பெற கிரீன் கார்டு பெற வேண்டும்.
கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி சுமார் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தற்போது கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இவர்கள் குடியுரிமை பெற ஏதுவாக S386 என்ற உயர்திறன் ஊழியர்கள் குடியேற்றச் சட்டம் ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றம் தற்போது நிறைவேற்றியுள்ளது. அடுத்தகட்டமாக இந்தச் சட்டம் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இதை அதிபர் ஏற்பாரா அல்லது நிராகரிப்பாரா என்று எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
தற்போதைய சூழலில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அமெரிக்கா கிரீன் கார்டு வழங்குகிறது.
இதையும் படிங்க: மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பரப்ப அமெரிக்காவில் சட்டம்!