அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் ஜோ பைடன் 290 இடங்களைப் பெற்றுள்ளார். டொனால்ட் டிரம்ப் 214 இடங்களைப் பெற்றுள்ளார். இருந்தும் வடக்கு கரோலினா, ஜார்ஜியா மாகணங்களில் வாக்கு எண்ணிக்கை முடியவில்லை.
பெரும்பான்மையின் அடிப்படையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல, கமலா ஹாரிஸ் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் அவர்களுக்குப் பல்வேறு நாடுகளின் அதிபர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்னும் ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் முழுமையாக வாக்கு எண்ணிக்கை முடியும் வரை ஜோ பைடனுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவிக்கமாட்டார் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து!