அமெரிக்கா - வட கொரியா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சி மாநாடு கடந்தாண்டு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், வட கொரியா தலைவர் கிம் ஜான் உன், கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அணு ஆயுத சோதனை முற்றிலும் கைவிடப்படும் என் கிம் உறுதியளித்தார்.
இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இரு நாட்டு தலைவர்களும் மீண்டும் வியட்நாமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த மாநாட்டில், பொருளாதர தடைகள் தொடர்பாக முரண்பாடு ஏற்பட்டதால் எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, "கடந்தாண்டு நடைபெற்ற சிங்கப்பூர் உச்சி மாநாட்டில், அணு ஆயுத சோதனை முற்றிலும் கைவிடப்படும் என உறுதியளித்திருந்தார். இது தொடர்பான தனிப்பட்ட முறையிலும் என்னிடம் உறுதியளித்துள்ளார். அவ்வாறு நடைபெற்றால் அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்பேன்" என்றார்.