ETV Bharat / international

புவி வெப்பமயமாதலை சமாளிக்க உதவும் நாசாவின் புதிய சாட்டிலைட்டுகள்

author img

By

Published : Nov 21, 2020, 5:52 PM IST

வாஷிங்டன்: புவி வெப்பமயமாதல் காரணமாக தொடர்ந்து உயரும் கடல்மட்டத்தை துல்லியமாக கண்காணிக்க ஏதுவாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் இரண்டு செயற்கைக்கோள்களை ஏவவுள்ளது.

NASA
NASA

தொழிற்சாலைகள், வாகன புகைகள் ஆகியவை காரணமாக நமது பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்த புவி வெப்பமயமாதல் காரணமாக இரு துருவங்களில் இருக்கும் பணிப்பாறைகள் கரைந்து கடலின் நீர்மட்டம் அதிகரித்துவருகிறது.

இதனால் கடலுக்கு அருகில் இருக்கும் நாடுகள் பெரும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிக முக்கியச் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான இத்தாலியின் வெனிஸ் இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலுமாக நீருக்கு அடியில் மூழ்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயரும் கடல் மட்டத்தை துல்லியமாக கண்காணிக்க ஏதுவாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இரண்டு செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளது. சென்டினல் -6 / ஜேசன்-சிஎஸ் (சேவையின் தொடர்ச்சி) என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் இரண்டு செயற்கைக்கோள்கள் ஏவப்படவுள்ளது.

கடலியலில் (oceanography) முன்னோடியாக இருந்த டாக்டர் மைக்கேல் ஃப்ரீலிச்சின் நினைவாக முதல் செயற்கைக்கோளிற்கு சென்டினல் -6 மைக்கேல் ஃப்ரீலிச் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் இந்திய நேரப்படி இன்று(நவ. 21) இரவு 10.47 மணிக்கு ஏவப்படவுள்ளது.

இத்திட்டத்தின் இரண்டாம் செயற்கைக்கோள், ஐந்து ஆண்டுகள் கழித்து, 2025ஆம் ஆண்டு ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அவசர ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ள ஃபைஸர் - விரைவில் கரோனா தடுப்புமருந்து?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.