ETV Bharat / international

அமெரிக்காவின் உயரிய விருதிற்கு மிட்செல் ஒபாமா உட்பட 9 பெண்கள் தேர்வு!

வாஷிங்டன்: அமெரிக்க நாட்டின் உயரிய விருதான "ஹால் ஆஃப் பேஃம்" 2021க்கு, மிட்செல் ஒபாமா, மியா ஹாம் உள்ளிட்ட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Obama
ஒபாமா
author img

By

Published : Mar 9, 2021, 3:27 PM IST

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அமெரிக்க நாட்டில் பெண்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது ஹால் ஆஃப் பேஃம் 2021, முன்னாள் முதல் பெண்மணி மிட்செல் ஒபாமா, கால்பந்து நட்சத்திரம் மியா ஹாம் உட்பட 9 பேருக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த விருது விழாவானது செனெகா நீர்வீழ்ச்சிப் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ஏனென்றால், அங்கு தான், அமெரிக்க வரலாற்றில் முதல் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது.

விருது பட்டியலில் முன்னாள் பெப்சிகோ தலைமை நிர்வாகி இந்திரா நூயி, ஓய்வு பெற்ற ஜெனரல் ரெபேக்கா ஹால்ஸ்டெட் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த விருது வழங்கும் விழாவுக்கான டிக்கெட் விற்பனை, இன்னும் தொடங்கப்படவில்லை. கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விழா இணையத்தில் நேரலை செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: '65 கோடி சிறுமிகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே திருமணம் '

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.