உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவையும் ஆட்டிப்படைத்துவருகிறது. கொரோனா வைரஸ் இதுவரை 100-க்கும் மேற்பட்டோரை அந்நாட்டில் தாக்கியுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்திருப்பது இது அங்குள்ள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் பரவாமல் தடுக்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் விமான நிர்வாகிகளைச் சந்தித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசினார். அப்போது, "நான் எனது முகத்தை கைகளால் தொட்டே ஒருவாரம் ஆகிறது. அதை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்" என நகைச்சுவையாகக் கூறினார்.
மேலும், விமான நிர்வாகிகள் கூறுகையில் "விமானங்களைச் சுத்தமாகவும் கிருமி இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகிறோம்" என்றனர்.
இதையும் படிங்க: கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள 'நமஸ்தே' கூறுங்கள் - இஸ்ரேல் பிரதமர்