வாஷிங்டன்: அனைத்து நாடுகளாலும் பரபரப்பாக பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்வின் தேர்வு முடிவுகள் தற்போது வரை இழுபறியில் உள்ளது. அதிபராக தேர்ந்தெடுக்கப்பட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுக்கு குறைந்த அளவிலான எண்ணிக்கையே தேவையாக உள்ளதையடுத்து தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் "வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிலளித்துள்ள இளம் காலநிலை ஆர்வலர் கிரேட்டா தென்பர்க், "மிகவும் அபத்தமாக உள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அவரது கோபத்தை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, உங்களுடைய நண்பருடன் இணைந்து ஒரு திரைப்படத்திற்கு செல்லுங்கள். அமைதி டொனால்ட் அமைதி" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த வார்த்தைகளைக் கொண்டு அவர் அமெரிக்க அதிபரை பழி தீர்த்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி காலநிலை குறித்த கிரேட்டா தென்பர்க்கின் கருத்துகளுக்கு ட்ரம்ப் இதே வார்த்தைகளை பயன்படுத்தி ட்வீட் செய்திருந்தார்.
கிரேட்டா தென்பர்க் அதிபர் ட்ரம்ப்பை கிண்டலடித்து ட்வீட் செய்த சில மணி நேரத்திலேயே அதனை 30 லட்சம் பேர் பகிர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: கிரேட்டாவை நக்கலடித்த ட்ரம்ப்!