உலக அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதுவரை ஆறு கோடியே 48 லட்சத்து 65 ஆயிரத்து 959 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 99 ஆயிரத்து 671ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியே 49 லட்சத்து 61 ஆயிரத்து 955ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஆறு லட்சத்து 70 ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்து 830 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 43 லட்சத்து 14 ஆயிரத்து 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 79 ஆயிரத்து 867 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
ரஷ்யாவில் இதுவரை சுமார் ஒரு லட்சம் பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மைக்கெல் முராக்ஷோ தெரிவித்துள்ளார். அதேபோல் பின்லாந்தில் 2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்த வாரம் பிரிட்டன் நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி கிடைக்கும்: பிரதமர் போரிஸ் ஜான்சன்