சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் பெருந்தொற்று, தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் தீவிரமான நிலையை எட்டியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் தவித்துவருகின்றன.
இந்த நிலையில், உலகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் புதிதாக 81, 591 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,27,802ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், நேற்று உலகம் முழுவதும் இத்தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த 5,931 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதன்மூலம், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,58,338ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 12,42,347 பேர் இத்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் கரோனாவால் 49, 391 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,694 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் இதுவரை 82,881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,633 பேர் உயிரிழந்த நிலையில் 77,853 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவால் அதிக பாதிப்புகளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் முறையே முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன.
நாடுகள் | பாதிப்புகள் | உயிரிழப்புகள் |
அமெரிக்கா | 12,37,633 | 72,271 |
ஸ்பெயின் | 2,50,561 | 25,613 |
இத்தாலி | 2,13,013 | 29,315 |
பிரிட்டன் | 1,94,990 | 29,427 |
பிரான்ஸ் | 1,70,551 | 25,531 |
இதையும் படிங்க: சீனாவுக்கு முன் பிரான்ஸில் பரவத் தொடங்கியதா கரோனா வைரஸ்?