சீனாவின் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் பெருந்தொற்று, தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இத்தொற்றினால் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், உலகம் முழுவதும் நேற்று புதிதாக 86 ஆயிரத்து 412 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், 5 ஆயிரத்து 561 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,42,354ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,92,893ஆக அதிகரித்துள்ளது. நேற்று உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 74 ஆயிரத்து 947 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,02,443ஆக அதிகரித்துள்ளது.
இத்தொற்றால் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ஸ்பெயின், ரஷ்யா, பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இதில், ஸ்பெயின், இத்தாலியில் இத்தொற்றின் தாக்கம் குறைந்துவரும் நிலையில், அமெரிக்காவில் இதன் தாக்கம் படுமோசமாக உள்ளது.
நாடுகள் | பாதிப்புகள் | உயிரிழப்புகள் |
அமெரிக்கா | 14,08,636 | 83,425 |
ஸ்பெயின் | 2,69,520 | 26,920 |
ரஷ்யா | 2,32,243 | 2,116 |
பிரிட்டன் | 2,26,463 | 32,692 |
இத்தாலி | 2,21,216 | 30,911 |
இதையும் படிங்க: தொற்றுநோய் தனிமைப்படுத்தலின் வரலாறு!