கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. உலகம் முழுவதும் 84,78,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 3,80,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,573 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த தொற்று குறித்து ஆய்வு செய்துவரும் அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின் ஆய்வாளர்கள், சார்ஸ்-கோவிட் 2 வகையின் மரபணுவை தற்போது கண்டிபிடித்துள்ளனர். இந்த மரபணுவை வைத்து அதன் வரலாறு, மிருகங்கள் இடமிருந்து மனிதர்களுக்கு ஏற்படும் பரவல், எதிர்காலத்தில் தொற்றின் வீரியம் உள்ளிட்டவற்றை கண்டறிய முடியும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 2,115 பேருக்கு கரோனா