வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் வியட்நாமுக்கு ரயில் மூலம் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு நேற்று இரவு அந்நாட்டின் தலைநகர் ஹனாய் வந்தடைந்தார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வியட்நாம் நேரப்படி நேற்று நள்ளிரவு விமானம் மூலம் ஹனாய் வந்தார். இருநாட்டு தலைவர்களுக்கு அரசுமுறைப்படி வியட்நாம் வரவேற்பு அளித்தது.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே இன்று இரண்டாம் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற முதலாம் உச்சி மாநாட்டில் இந்த இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர். அது முதற்கொண்டே இரு தலைவர்களுக்குமிடையே நல்லுறவு நீடித்து வருகிறது.
இதனால் இன்றும், நாளையும் நடைபெறும் இரண்டாம் உச்சி மாநாட்டின் மூலம், இரு நாடுகளுக்கிடையே மேலும் நல்லுறவு வலுப்படும் எனவும் உலக அரசியல் அரசியல் அரங்கில் எதிர்பார்க்கப்படுகிறது.