ETV Bharat / international

கோவிட்-19 ஊரடங்கில் மாற்றம் கண்ட மனித நடத்தைகளால் காற்று மாசு குறைந்தது - நாசா தகவல்! - பல்கலைக்கழகங்களின் விண்வெளி ஆராய்ச்சி சங்கம் (யூ.எஸ்.ஆர்.ஏ)

வாஷிங்டன் : கோவிட்-19 அச்சுறுத்தலின் போது அமல்படுத்தப்பட்டஉலகளாவிய ஊரடங்கு காரணமாக பூமியின் வளிமண்டலத்தில் காற்று மாசு குறைந்திருப்பதை நாசா ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

கோவிட்-19 ஊரடங்கில் மாற்றம் கண்ட மனித நடத்தைகளால் காற்று மாசு குறைந்தது - நாசா தகவல் !

author img

By

Published : Nov 21, 2020, 9:57 PM IST

கடந்த ஆண்டின் நவம்பர் மாத நடுப்பகுதியில் சீனாவில் வெடித்த கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு இன்று உலகளாவிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது.

கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்படுத்த, பரவலைத் தடுக்க சர்வதேச நாடுகள் முழுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்தின.

மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் உருவானது. விமானங்கள் உள்ளிட்ட போக்குவரத்துக்கான எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. உணவு விடுதிகள், ஓட்டல்கள் மூடப்பட்டன.

பெரும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் முழுமையாக இயங்கா நிலைக்கு தள்ளப்பட்டன.

உலகளவில் கரோனா ஊரடங்கின் காரணமாக காற்றின் தரம், ஒலி மாசுபாடு, தண்ணீர் தரம் உள்ளிட்டவற்றில் மாசு கடுமையாக குறையும் சூழல் உருவானது.

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட வளிமண்டலத்தின் படங்கள் காற்று மாசுபாடுகளில் குறிப்பிடத்தக்க குறைப்புகளைக் கண்டிருப்பதைக் காட்டுவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.

காற்று மாசு அளவுக்கோளில் சரிவு ஏற்பட்டதற்கான காரணங்களை நாசா ஆராய்ச்சியாளர்கள் தரவுகளின் அடிப்படையில் வெளிப்படுத்தியுள்ளனர்.

மேரிலாந்தை அடுத்த கிரீன் பெல்ட்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான நிலையத்தில் பல்கலைக்கழகங்களின் விண்வெளி ஆராய்ச்சி சங்கத்துடன் (யூஎஸ்ஆர்ஏ) இணைந்து ஆய்வாளர் கிறிஸ்டோஃப் கெல்லர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

வளிமண்டல மாசு தொடர்பாக ஆய்வாளர் கிறிஸ்டோஃப் கெல்லர் கூறுகையில், "ஊரடங்கால் காற்றின் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வளிமண்டலத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் மாற்றங்கள் குறித்து நாசா நிறுவனம் மாதிரி கணிப்புகளை நடத்த திட்டமிட்டது.

பூமியின் வளிமண்டலத்தில் நிகழ்ந்த வேதியியல் மாற்றங்கள், மாசு சரிவு உள்ளிட்டவற்றில் கோவிட்-19 ஊரடங்கின் தாக்கம் எவ்வளவு தொடர்புடையது என்பதைக் கணக்கிட முனைந்தது.

46 நாடுகளிலிருந்து 5,756 கண்காணிப்புத் தளங்களில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் தரவுகளைப் பெற்றனர்.

பகுப்பாய்வு செய்யப்பட்ட 61 நகரங்களில் 20% முதல் 50% வரையில் நைட்ரஜன் டை ஆக்சைடு குறைவு ஏற்பட்டுள்ளது.

அது எப்படி இவ்வளவு அளவு குறைந்தது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்.

பல நாடுகள் கடைப்பிடித்துவரும் விதிமுறைகளின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக நைட்ரஜன் டை ஆக்சைடு செறிவுகள் குறைக்கப்பட்டுக்கொண்டே வந்தன. அவர்களின் மிகச் சிறந்த பணியை நாம் அறிவோம்.

ஆனால் எங்கள் ஆய்வின் முடிவில், மனித நடத்தை சார்ந்த விஷயங்கள் இதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது என்பதையே தெளிவாகக் காட்டுகிறது.

ஆசியாவின் பெரும்பகுதிகளிலும், சீனாவிலும் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நைட்ரஜன் டை ஆக்சைடு அதிகளவு மாசை ஏற்படுத்தும், இந்தாண்டு பெரும்பாலும் அது குறைந்தது.

நைட்ரஜன் டை ஆக்சைடு வெளிப்படுதல் அளவை கடந்த 2019 ஆம் ஆண்டோடு ஒப்பிட்டால் இந்தாண்டு மிகக் குறைவாகவே இருந்தது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன், நைட்ரஜன் டை ஆக்சைடு சரிவில் ஏற்பட்ட இறக்கம் சற்று குறைந்தது. ஆனால், ஊரடங்கு தளர்வை அடுத்து எதிர்பார்க்கப்பட்ட மாசின் அளவு வழக்கம் போல இல்லாமல் மதிப்புகளுக்கு கீழே உள்ளது.

நைட்ரஜன் டை ஆக்சைடு பயணம் செய்யும் நபர்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பொருளாதார நடவடிக்கைகளுடன் மிகவும் நெருக்கமாக இணைந்திருப்பதால் அவை ஓரளவு தொடர்புடையதாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்

செயற்கை கோள் தரவுகளும் காற்றில் துகள்கள் அளவு குறிப்பிடத்தக்க அளவு சரிவு கண்டுள்ளதை காட்டுகின்றன. எங்கள் தரவு இதை நன்றாகப் படம் பிடித்து காட்டுகிறது.

ஓசோன் துளையும் இயல்பாகவே சரியாவது போன்ற பார்க்க முடியாத விளைவுகளையும் இந்த பொது முடக்கம் ஏற்படுத்தி உள்ளது.

காற்று மண்டலத்தின் மேல் பசுமை குடில் வாயு உமிழ்வுகள் குறைந்து இருக்கின்றன. இப்படி எல்லா விதத்திலும் சுற்றுச்சூழல் மாசு குறைந்து இயல்பான நிலைக்கு திரும்ப உதவியதற்காக கரோனாவுக்கு நன்றி சொல்லலாம் " என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.