ETV Bharat / international

பைடன் ஆட்சியில் சீன-அமெரிக்க உறவு இயல்பு நிலைக்கு திரும்பும் - சீனா நம்பிக்கை - அமெரிக்க அதிபர் டிரம்ப்

பெய்ஜிங்: எதிர்வரும் காலத்தில் அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சியில் சீன-அமெரிக்க உறவு புதிய உச்சத்தை எட்டும் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் தெரிவித்துள்ளார்.

சீன-அமெரிக்க உறவு
சீன-அமெரிக்க உறவு
author img

By

Published : Jan 2, 2021, 10:08 PM IST

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆட்சி காலத்தில் சீனாவுடன் கடுமையான மோதல் போக்கை கையாண்டார். சீன பொருள்களுக்கு அதிகளவிலான வர்த்தக வரிவிதிப்பு, எல்லை பிரச்னை, திபெத், தைவான் பிரச்னை என பல்வேறு விடயங்களில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவின.

அமெரிக்காவில் செயல்படும் பிரபல சீன நிறுவனங்கள் மூடப்பட்டன. பிரபல சீன செயலிகளுக்கு டிரம்ப் அரசு தடை விதித்தது. வரலாறு காணாத அளவில் கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவும் சீனாவும் மோதிக்கொண்டன.

இந்த சூழலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து அவர் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சீனா வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்-இ, எதிர்வரும் காலத்தில் அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சியில் சீன-அமெரிக்க உறவு புதிய உச்சத்தை எட்டும் என்று தெரிவித்தார். மேலும், டிரம்ப் ஆட்சியில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பனிப்போர் இனி நிலவாது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.